Skip to main content

“தங்கு தடையின்றி நடந்து வரும் வன்கொடுமை” - முதல்வருக்கு பா.ரஞ்சித் கேள்வி

Published on 15/02/2025 | Edited on 15/02/2025
pa.ranjith questioned mk stalin regards schedule caste issue

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு காணொளி வாயிலாகப் பதிலளித்துள்ளார். அந்த காணொளியில் பட்ஜெட் கூட்டத்தொடர், பெண்களுக்கான கல்வி, கூட்டணி கட்சி முரண்கள், இந்தியா கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். 

இந்த காணொளியை மேற்கோள் காட்டி தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? 

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.-க்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்” என்றார். 

சார்ந்த செய்திகள்