Published on 12/11/2018 | Edited on 12/11/2018
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள பொச்பனி கிராமத்தில் இருக்கும் சக்குலியா பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் அதிகாம உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பள்ளிக்குச் செல்லும் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வில்லையும் அம்பையும் கொடுத்து அனுப்பும் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து அங்குள்ள கிராமவாசி தெரிவிக்கையில், ”பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காட்டுப்பகுதியை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அந்த பகுதியில் நக்ஸல்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி, தற்காப்பிற்காக வில்லையும் அம்பையும் கொடுத்து அனுப்புகிறோம்” என்றார்.