Skip to main content

“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, அண்மையில் கூச் பிஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, ஹைதராபாத்தை சேர்ந்த அரசியல் தலைவரான ஓவைசியை கடுமையாக விமர்சித்தார். அதில், அவர் பாஜகவின் கைக்கூலி என்பதுபோன்றே பேசியிருந்தார். இதனால் அந்த மாநிலத்தில் ஓவைசியின் கட்சிக்கும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. 
 

mamta owaishi

 

 

இதற்கு ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி பதிலளித்தார். அதில், “மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தகவலை கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் எங்கள் கட்சி அசைக்க முடியாத சக்தி என்பதால் பயப்படுகிறார்.’’ எனக் கூறினார்.

இப்படி மாறி மாறி இருவரும் விமர்சித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தில் மம்தா ஓவைசியை பாஜகவின் நண்பர் ஓவைசி என்று விமர்சித்துள்ளார். அதில், “வெளியில் இருந்து வந்து சிறுபான்மை மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்களை நம்பக்கூடாது. மேற்குவங்கத்தை சேர்ந்த தலைவர்களால் மட்டுமே உங்களுக்காக போராட முடியும்.

முஸ்லிம்களின் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து பண மூட்டையுடன் வரும் சில தலைவர்கள் பாஜகவின் தோழர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்