Skip to main content

விமானம் குறித்து தகவல் தந்தால் ரூபாய் 5 லட்சம் வெகுமதி!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் அசாம் மாநிலம் ஜோர்கார்ட் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து  ஜூன் 3 ஆம் தேதி, 13 பேருடன் அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. விமானம் கிளம்பிய அரை மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட நிலையில் விமானம் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. விமானம் தேடும் பணியில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம், அருணாச்சலப்பிரதேச மாநில காவல்துறை ஈடுப்பட்டுள்ளது.

 

 

AN 32 FLIGHT

 

 


இதே போல் ராணுவம், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தேடுதல் பணிகள் 7-வது நாளை எட்டிய போதும், மாயமான விமானம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே தேடும் பணிகளில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 

 

INDIAN AIR FORCE

 

 

இந்த நிலையில் மாயமான விமானம் புறப்பட்ட ஜோர்காட் விமானப்படை தளத்துக்கு விமானப்படை தளபதி தனோவா நேற்று சென்றார். அங்கு அவர் விமானத்தை தேடும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் தேடும் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்த அதிகாரிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில் மயமான விமானம் தொடர்பாக தகவல்களை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என இந்திய விமான படை அறிவித்துள்ளது. தகவல்களை 9436499477/ 9402077267/ 9402132477 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அளிக்கலாம் என விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்