Published on 15/04/2025 | Edited on 15/04/2025

திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு வயது 58.
இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ஏப்ரல் மாதத்தில், கிழக்கு கடற்கரை சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அது மட்டுமல்லாது, பெரியார், ராவணன், சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.