Published on 02/05/2021 | Edited on 02/05/2021

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராமில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர், தனது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.