Skip to main content

பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன்...

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

external affairs ministry summons pakistan diplomat n delhi

 

 

ஜம்மு - காஷ்மீரின் நக்ரோட்டாவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. 

 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் மீதும் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில், நக்ரோட்டாவில் இருந்து ஜம்முவை நோக்கி வந்த ட்ரக் ஒன்றை பன் சுங்கச்சாவடி அருகே பாதுகாப்புப் படையினர் சோதனை செய்துள்ளார். அப்போது அதிலிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்