ஆந்திர மாநிலத்தில், 2 லட்சம் கிலோ கஞ்சாவை போலீஸார் தீ வைத்து எரித்து அழித்துள்ளனர். இந்த 2 லட்சம் கிலோ கஞ்சா ஆந்திராவின் பல்வேறு காவல் நிலையங்களால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கைப்பறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தீ வைத்து எரித்து அழிக்கப்பட்ட கஞ்ஞாவின் மொத்த மதிப்பு 500 கோடியாகும்.
கோடூரு என்ற கிராமத்தில் சுற்றி 4 கிலோ மீட்டர்களுக்கு ஆட்களே இல்லாத பகுதியில் இந்த கஞ்ஞா அழிப்பு பணி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த பணி நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள கிராமத்தில் உள்ளவர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் 1 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 8 வரை, விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள 313 கிராமங்களில் 7,552 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ரூ.9,251 கோடி மதிப்பிலான கஞ்சா விளைச்சலையும் போலீஸார் அழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.