"KING FISHER AIRLINES" MD. Mr.விஜய்மல்லையா இந்திய வங்கியிடம் ரூபாய் 9000 கடனை பெற்றுக்கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் நிரவ்மோடி உட்பட பல தொழிலதிபர்கள் கடனை பெற்றுக்கொண்டு செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பித்துச் சென்றுள்ளனர். இவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இவர்களின் இந்திய சொத்துக்களையும் பறிமுதல் செய்து வருகிறது இந்திய அரசு.
இந்நிலையில் நேற்று டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் "NEWS 18 CHANNEL" - "Agenda" நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி , பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மாநில முதல்வர்கள் பங்கேற்று பேசினர். இந்திய வங்கிகளின் வாரா கடன் குறித்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடன்கள் வசூலிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் விஜய்மல்லையா கடன் குறித்து பிரதமர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தனது டிவிட்டர் வாயிலாக பதிலளித்துள்ள விஜய் மல்லையா தான் வாங்கிய கடன் ரூபாய் 9000 கோடி எனவும் , ஆனால் எனது 14000 கோடி சொத்துக்களை வங்கிகள் பறிமுதல் செய்துள்ளது என தெரிவித்தார். இவரின் டிவிட்டால் அதிர்ந்த போன மத்திய அரசு. மேலும் விஜய் மல்லையா கூறுகையில் தான் வாங்கிய கடனுக்கு மேல் சுமார் 5000 கோடி மதிப்பிழான எனது சொத்துக்களை பறிமுதல் செய்தது மத்திய அரசு என தெரிவித்தார்.
பி. சந்தோஷ் , சேலம் .