கூகுள் நிறுவனம் இணையதளம் சந்தையில் தனது போட்டியாளர்களின் தேடு விளம்பரங்களை வெளியிடுவதை தடுத்து, வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரார்களுக்கு மட்டும் தேடு விளம்பரங்களை வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் செய்து அதன் மூலம் அனுமதி வழங்குவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை விசாரித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு 11,643 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஆன்ட்ராய்ட் இயங்குதளம், போட்டி நிறுவனங்களின் விளம்பரங்களைத் தடை செய்ததாக 2009-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புகாரின் பேரில் 2016-ம் ஆண்டு கூகுள் மீதான புகார்களை விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் குழு அமைத்தது.
இந்த குழு ஏற்கெனவே கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திற்கு 33,915 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அதற்கு முந்தைய ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு 18,911 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில் பிரச்சல்ஸில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்பு மூன்றாவது முறையாக கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,643 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.