Published on 20/12/2020 | Edited on 20/12/2020
நேபாள நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி உத்தரவிட்டுள்ளார்.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில் அவரச அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானம் ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரிக்கு அனுப்பப்பட்டது. அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று நேபாள நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி உத்தரவிட்டார்.
மேலும் நேபாள நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் அடுத்தாண்டு இரண்டு கட்டமாக நடக்கும் என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், முதற்கட்டத்தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதியும், இரண்டாம் கட்டத்தேர்தல் மே மாதம் 10- ஆம் தேதியும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.