Skip to main content

மார்ச் இறுதிக்குள் தீர்ப்பு; பா.ஜ.க. பொறியில் சிக்கிய இ.பி.எஸ்!

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

BJP'  EPS caught in the trap admk party issue

‘உயர்நீதிமன்ற உத்தரவுப் படி மார்ச் இறுதிக்குள் அ.தி.மு.க. கட்சி தொடர்பான தீர்ப்பினை தேர்தல் ஆணையம் வழங்கிவிடும். அந்தத் தீர்ப்பு எங்கள் தரப்பிற்கு சாதகமாக வரும். அ.தி.மு.க. எங்கள் வசமாகும். ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தபடி பிரிந்தவர்களைக் கட்சிக்குள் இணைத்தால் எடப்பாடி கட்சியில் நீடிக்கலாம். இல்லையேல் கழட்டி விடப்படுவார். பொறியில் சிக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என்று ஒ.பி.எஸ் தரப்பின் முக்கியப் பொறுப்பாளர்களிடையே கனமான பரபரப்பு பேச்சுக்கள் கிளம்புகின்றன. அண்மையில் ஒ.பி.எஸ். தனது தரப்பு நிர்வாகிகளிடம் சில விஷயங்களை முழுமையாகவே வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

ஒ.பி.எஸ். தரப்பின் தென் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரிடம் நாம் பேசியபோது, ‘ஒ.பி.எஸ். வெளிப்படுத்திய அவரின் மன ஓட்டங்கள் வெளிப்பட்டன. அவர்கள் ஆதாரங்களுடன் விரிவாகவே நம்மிடம் பேசினார்கள். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா அப்பல்லோவில் மரணமான பின்பு நடந்த கூவத்தூர் சம்பங்களால் எடப்பாடி முதல்வரானார். பின்னர் ஒருவழியாக ஒ.பி.எஸ். துணை முதலமைச்சரானார்.

கட்சியின் விதி முறைகளின்படி கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் கட்சியை வழிநடத்த கட்சி நிர்வாகிகளின் முடிவின் படி ஏற்பட்ட இணக்கம் காரணமாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஒ.பி.எஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அ.தி.மு.க ஆட்சிக்குப் பின்பு 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பீடமேறியது. அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்றது.

BJP'  EPS caught in the trap admk party issue

தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்ட ஞானோதயம் காரணமாக, கட்சிக்குள் இரட்டைச் சவாரி எதற்கு என்ற முடிவிற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குத் தேவை ஒற்றைத் தலைமைதான். அந்தத் தலைமைதான் தீர்க்கமான முடிவெடுக்கும், கட்சியையும் தனது கண்ட்ரோலுக்குள் கொண்டு வர எண்ணிய எடப்பாடி பழனிசாமி, மா.ஜி. அமைச்சரான உதயகுமார் மூலம், ஒற்றைத் தலைமைப் பிரச்சினையைக் கிளப்பினார். பின்னர் அந்தப் பொருள் பெரிய விவகாரமாக, கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி அதனைத் தீர்மானமாக நிறைவேற்றிய போது பொன்னையன், மதுசூதனன், ஒ.பி.எஸ். ஆகியோர் வலுவாக எதிர்ப்புத் தெரிவித்தும் முடியாமல் போயிருக்கிறது.

அடுத்த அதிரடியாக தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியின் பொதுச் செயலாளர் என்றாக்கிக் கொள்கிற முயற்சியிலிறங்கிய போது, எதிர்த்த ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ராஜினாமாச் செய்து விட்டார். அதன்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான் மட்டுமே நீடிக்கிறேன். 2026 வரை எனது பொறுப்பு உயிர்ப்புடனிருப்பதால் கட்சியின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளும் எனது வசமே என வெளிப்படையாகப் பிரகடனம் செய்ய அ.தி.மு.க.வில் பற்றிக் கொண்டது.

இதற்குள் வினயமாகச் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மா.செ.க்கள், செயற்குழு உறுப்பினர்களைக் கூட்டி, 10 மா.செக்களை முன் மொழியவைத்தும், 10 மா.செ.க்களை வழி மொழிய வைத்தும், தன்னைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்க வகை செய்து பொதுச் செயலாளராகி விட்டார். அவர் நினைத்தபடி கட்சியின் ஒற்றைத் தலைமையானார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத ஒ.பி.எஸ். அந்தத் தேர்தல் செல்லாது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நானே என கொடி உயர்த்த கட்சியின் பொது செ. என்ற அந்தஸ்தில் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டோர்களை கட்சியிலிருந்து நீக்கினார்.

BJP'  EPS caught in the trap admk party issue

அது வரையிலும், எடப்பாடியின் இந்த செயல்பாடுகளை ரசித்துக் கொண்டிருந்த, தற்போது உள்விவகாரங்களால் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியாயிருக்கிற வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்ற கட்சியின் ஆளுமைகள் அப்போதைய சமயங்களில் எதுவுமே பேசவில்லையாம். எனவே கட்சியில் எடப்பாடியின் சக்கரங்கள் எதிர்ப்பின்றி சுழன்றிருக்கின்றன. ஆனால் விக்கிரமாதித்த முயற்சியிலிறங்கிய ஒ.பி.எஸ். தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு, எடப்பாடியின் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வுமுறைகள் செல்லாது உள்ளிட்டவைகளை உயர்நீதிமன்றம் வரை வழக்காகக் கொண்டு சென்றிருக்கிறார்.

அ.தி.மு.க. இரண்டு கூறான பின்பு அதன் முந்தைய தேர்தல் பார்ட்னரான பா.ஜ.க.வும் பிரிந்து பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்த போது பலத்த அடிவாங்கின. அடிவாங்கிய பின்பு தெளிவு பெற்ற ஒ.பி.எஸ். பிரிந்து சென்றவர்களான, தன்னை டி.டி.வி. சசிகலா உள்ளிட்டவர்களை  கட்சியில் ஒருங்கிணைத்தால் தான் அ.தி.மு.க. முன்பு மாதிரி பலம் பெறும் என்று தொடர்ந்து சொல்லத் தொடங்கினார். அதே சமயம், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தான் சாத்தியம். தனக்கும் பலமான தேர்தல் தோஸ்த் என்ற முடிவிற்கே வந்தது பா.ஜ.க.

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற கெத்திலிருக்கும்  எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால செயல்பாடுகளால் கடும் அதிருப்திக்குள்ளான வேலுமணி, தங்கமணி அடுத்து மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஆகியோரும் ஒன்றிய அரசின் இ.டி. ஐ.டி. போன்ற சீரியசான துறைகளின் ரெய்டால் சிரமங்களை எதிர்கொண்ட அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ‘அவர்கள்’, என மொத்தப் பேர்களும் சைலண்ட்டாக எடப்பாடி பழனிச்சாமிக்கு  கெதிராக மாறியிருக்கிறார்களாம். குறிப்பாக அண்மையில் அ.தி.மு.க. அரசியல் மட்டத்தில் பரபரப்பிற்குள்ளான செங்கோட்டையன் கூட ஒ.பி.எஸ். சசிகலா போன்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் கட்சி பலமாகும் என்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது போன்ற நிகழ்வுகளுக்கு முந்தைய மாதங்களில் தான், நீண்ட விசாரணைக்குப் பின்பு, அ.தி.மு.க. கட்சியின் நிர்வாகம், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பு உள்ளிட்ட உட்கட்சி வழக்குகளை தேர்தல் ஆணையமே விசாரித்து முடிவு செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் பொறுப்பைத் தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைத்தது. தேர்தல் ஆணையம் வரை போனதால், ஓ.பி.எஸ்.சோ வழக்கு தொடர்பாக ஆணித்தரமான ஆதாரங்களை தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைத்திருக்கிறாராம்.

1972 அக் 17ம் தேதி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியை ஆரம்பித்தபோது, கட்சியின் பொதுச் செயலாளரைக் கட்சியின் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், கட்சியின் பிற நடவடிக்கைகள், செயல்பாடுகள் என அனைத்திற்கும் கட்சியின் விதி. சட்ட திட்டங்கள் என்கிற பை-லா வை உருவாக்கிய தலைவர் எம்.ஜி.ஆர், அந்த விதிகளை நினைத்த மாத்திரத்தில் எவரும் மாற்றி விடாத வகையில் விதிகளையும் சட்டப் பூர்வமாக இயற்றியிருக்கிறார். அந்த விதிகளுக்கேற்பத் தான் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின்பு வந்த அம்மா, ஜெயலலிதாவும் கட்சியின் ஏகோபித்த தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு வந்திருக்கிறார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தலைவர் சட்டமாக்கிய பை-லா வைச் சட்டத்திற்கு புறம்பாக்கிக் கொண்டு கட்சி விதிகளுக்கு முரணாக 10 மா.செ.க்களை முன்மொழிய 10 மா.செ.க்களை வழி மொழிய வைத்து தன்னைக் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வைத்த தேர்தல் முறை செல்லாது, மேலும் ஏற்கனவே கட்சியினரால் அங்கீகரிக்கப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எடப்பாடி ராஜினாமா செய்துவிட்டதால் அந்தப் பொறுப்பு முடிந்துவிட்டது. முறைப்படி நான் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் நீடிக்கிறேன். 2026 வரை எனக்கு அந்தப் பொறுப்பு நீடிப்பதால் அ.தி.மு.க.வின் அனைத்து பொறுப்பும் என் வசம் தான் என்றும், இவைகளுக்கான அசைக்க முடியாத ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒ.பி.எஸ். சமர்ப்பித்திருப்பது தான் எடப்பாடிக்கு எதிரான பிரமாஸ்திரம் என்கிறார்கள்.

அ.தி.மு.க. இரண்டு கூறான பின்பு அதன் முந்தைய தேர்தல் பார்ட்னரான பா.ஜ.க.வும் பிரிந்து பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்த போது பலத்த அடிவாங்கின. அடிவாங்கிய பின்பு தெளிவு பெற்ற ஒ.பி.எஸ். பிரிந்து சென்றவர்களான, தன்னை டி.டி.வி. சசிகலா உள்ளிட்டவர்களை  கட்சியில் ஒருங்கிணைத்தால் தான் அ.தி.மு.க. முன்பு மாதிரி பலம் பெறும் என்று தொடர்ந்து சொல்லத் தொடங்கினார். அதே சமயம், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தான் சாத்தியம். தனக்கும் பலமான தேர்தல் தோஸ்த் என்ற முடிவிற்கே வந்தது பா.ஜ.க.

BJP'  EPS caught in the trap admk party issue

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற கெத்திலிருக்கும்  எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால செயல்பாடுகளால் கடும் அதிருப்திக்குள்ளான வேலுமணி, தங்கமணி அடுத்து மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஆகியோரும் ஒன்றிய அரசின் இ.டி. ஐ.டி. போன்ற சீரியசான துறைகளின் ரெய்டால் சிரமங்களை எதிர்கொண்ட அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ‘அவர்கள்’, என மொத்தப் பேர்களும் சைலண்ட்டாக எடப்பாடி பழனிச்சாமிக்கு  கெதிராக மாறியிருக்கிறார்களாம். குறிப்பாக அண்மையில் அ.தி.மு.க. அரசியல் மட்டத்தில் பரபரப்பிற்குள்ளான செங்கோட்டையன் கூட ஒ.பி.எஸ். சசிகலா போன்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் கட்சி பலமாகும் என்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தச் சூழலில் தான் பா.ஜ.க.வின் தொடர் நடவடிக்கைகளால் துவண்டு போன மாஜிக்களான வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பா.ஜ.க. மேலிட தரப்போடு அனுசரணையாகப் போவதுடன் அவர்களின் கண்ணசைவிற்கேற்ப கட்சியில் காய்களை நகர்த்துகின்றனர். பிரிந்து சென்றவர்களை, சசிகலா போன்றவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வாய்ஸ் ஆஃப் பா.ஜ.க.வாக ஒலிக்கின்றனராம். எடப்பாடியின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கடும் மன உளைச்சலுக்குள்ளான சீனியர் செங்கோட்டையனும் தற்போது இந்த மாஜிக்களின் குரலோடு இணைந்து இணைப்பு அவசியம் என்கிறார். 

இதன் பின்னணியில் பா.ஜ.க.வின் பவர் ப்ளே ஆட்டமிருக்கிறது, கடந்த எம்.பி. தேர்தல் முடிவு கொடுத்த அதிர்ச்சியின் விளைவு பா.ஜ.க.வை உசுப்பியிருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இணைந்து செயல்பட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி கொண்டதால் தமிழகத்தில் பா.ஜ.க.வினரால் எம்.எல்.ஏ.வாக முடிந்தது. பின்னர் நடந்த எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. இரு அணியாகப் பிரிந்து களம் கண்டபோது முடிவு பூஜியம் தான். எனவே வரவிருக்கிற 2026 சட்டமன்ற தேர்தலை பிரிந்தவர்களை இணைத்து ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி கொண்டு களம் கண்டால்தான் கௌரவமான சீட்கள் கிடைக்கும், என்று பா.ஜ.க.வின் தலைமை பீடம் கருதுகிறதாம். அதற்கேற்ப அ.தி.மு.க.வின் இணைப்பிற்காக வேலுமணி அன் கோ வினர் செயல்படுகின்றனர். அவர்கள் வெளிப்படையாகச் செயல்பட்டாலும், எடப்பாடியோ, இணைப்பிற்கு ஒத்துக் கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்தவர், பா.ஜ.க. வுடன் கூட்டணி உண்டு, இல்லை, என்று கூட வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது பா.ஜ.க.வை எரிச்சலாக்கியிருக்கிறது. எனவே எடப்பாடியை தங்கள் வழிக்குக் கொண்டு வர இந்த இடத்தில் தான், பா.ஜ.க., ஒ.பி.எஸ்.சைக் கொண்டு தன் அரசியல் சதுரங்க வேட்டையை நடத்தியிருக்கிறது.

BJP'  EPS caught in the trap admk party issue

நீதிமன்ற கெடுவின்படி தேர்தல் ஆணையம், இந்தமாத இறுதிக்குள் அ.தி.மு.க.வின் தலைவிதியை நிர்ணயிக்கிற இறுதி முடிவை, தீர்ப்பை வெளியிடவிருக்கிறது. எனவே இப்போது பந்து தேர்தல் ஆணையத்தின் கரங்களில் இருக்கிறது. பா.ஜ.க.வின் நூலசைவிற்கேற்ப ஆடும் ஒ.பி.எஸ்.சிற்கு அதன் முழு ஆதரவிருப்பதால் எந்த வகையிலும் இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்பில்லையாம். எனவே, இந்த விவகாரத்தில் ஒ.பி.எஸ்.சிற்கு பா.ஜ.க.வின் முழு ஆதரவிருக்கிறது. அதன் பலன் இறுதித் தீர்ப்பில் தெரியும்.

ஒ.பி.எஸ் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அதனை ஏற்றுக்கொண்டு, கட்சியின் பை-லா வின்படி எடப்பாடியின் கட்சிப் பொதுச் செயலாளர் தேர்தல் முறை செல்லாது. தவிர, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தன் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டார். இவை தவிர்த்து முறைப்படி பார்த்தால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒ.பி.எஸ். நீடிப்பதால், அ.தி.மு.க. கட்சி அதன் நிர்வாகம் அனைத்தும் அவர் பொறுப்பில் வருகிறது என்கிற இறுதி முடிவு வரவாய்ப்பிருக்கிறது என்பதையே ஒ.பி.எஸ். தன் தரப்பு முக்கிய சகாக்களிடம் பகிர்ந்திருக்கிறாராம்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பிற்குப் பின்பு ஒ.பி.எஸின் திட்டப்படி, தள்ளி வைக்கப்பட்ட டி.டி.வி, சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கப்படுவார்கள். இந்த ஒருங்கிணைந்த அ.தி.மு.க. இயக்கம் ரீதியாக வலுப்பெறும். இந்த இணைப்பை ஏற்றுக் கொண்டால் எடப்பாடி கட்சியில் நீடிக்கலாம். இல்லையெனில் சிக்கல் தான். இப்படி பா.ஜ.க. வைத்த பொறியில் சிக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் ஒ.பி.எஸ். தரப்பினர்.

சார்ந்த செய்திகள்