Skip to main content

புதிய வகை கரோனா: மேலும் இரண்டு நாடுகளுக்கு பரவல்!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
covid 19

 

 

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், தற்போது மரபணு மாற்றமடைந்து, புதிய வகை கரோனவாக மாறியுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்தப் புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை கரோனா பரவலை தடுக்கும் விதமாக,  இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து விமானங்கள் வர பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

 

இந்தநிலையில் ஜப்பான் மற்றும் பிரான்சில், புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஐந்து பேருக்கும், பிரான்ஸ் நாட்டில் ஒருவருக்கும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

புதியவகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 6 பேரும் சமீபத்தில் இங்கிலாந்து சென்று திரும்பியவர்கள் எனவும், அவர்கள் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் மற்றும் பிரான்ஸ்   நாடுகள் தெரிவித்துள்ளன. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்