தமிழகத்தில் சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அதிகம் இடங்களை கைப்பற்றிய நிலையில் திருச்சி மாவட்டம் ஒட்டுமொத்தமாக 14 ஒன்றியங்களையும் திமுக வசமாகியுள்ளது. வெற்றிபெற்றவர்களை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அழைத்து சென்று ஆசீர்பெற்றனர்.
இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் 30 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக இருந்தவர். திமுகவின் பல்வேறு மாநில மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் என நடத்தினர். கூட்டணி கட்சியினர் இடையே பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர். திமுகவில் சீனியர் அமைச்சராக வலம் வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு தற்போது கட்சியில் மாநில பொறுப்பு கொடுக்க போவதாக கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும நிலையில். இன்று சென்னையில் அவசரமான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து பாராட்டுவிழா மற்றும் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுது.
அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுபெற்றுள்ளது. இது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் வடக்கு மாவட்டத்திற்கு தியாகராஜனும், தெற்கு மாவட்டத்திற்கு கே.என். நேரு இருந்து வருகிறனர். தற்போது கே.என்.நேருவுக்கு தலைமை கழகத்தில் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட உள்ளதால் அந்த இடத்தை திருச்சி மாநகர செயலாளர் முன்னாள் துணைமேயர் அன்பழகனுக்கு கொடுக்க வேண்டும் என்று கே.என்.நேரு சிபாரிச செய்திருக்கிறார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஒப்புதல் கொடுத்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ் திருவரம்பூர் தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனா நிலையில் தானும் மா.செ.வாக பதவி வேண்டும் என்று கோரிக்கை திமுக தலைவர் மகன் உதயநிதி மூலம் வைக்க. தற்போது அன்பில் மகேசின் கோரிக்கையும் ஏற்கப்பட்டு திருச்சி மாவட்ட திமுக 3 மாவட்டமாக பிரிக்கப்பட உள்ளது.
திருச்சியில் புதிய மா.செயலாளர்களாக வழக்கறிஞர் பாஸ்கர், காடுவெட்டி தியாகரன், அன்பில் மகேஷ் ஆகியார் தயார் ஆகி வருகிறார்கள்.!