அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அண்மையில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து புதுச்சேரியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வழக்கத்தில் இதேபோல் வடமாநில மாணவி ஒருவர் தன் சக நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது மூன்று பேரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐஐடியில் பயின்று வரும் மாணவி ஒருவர் களிக்குன்றம் சாலையில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஐஐடி மாணவி கொடுத்த புகாரின் பேரில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on 15/01/2025 | Edited on 15/01/2025