அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (05/11/2024) நடைபெற உள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் அம்மா பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம். முன்னைய காலத்தில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது அந்த கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் கமலா ஹாரிஸ் போட்டியிட்ட நாளில் இருந்தே கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம் என விழாக்கோலமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த முறையும் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்புடன் நம்பிக்கை தெரிவித்து வாழ்த்து பேனர்களை வைத்துள்ளனர் துளசேந்திரபுரம் கிராம மக்கள்.