சென்னையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று மாலை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் ஜவஹிருல்லா தெரிவித்ததாவது,
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பிப்.19ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரும் என நம்புகிறோம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவித்தால் இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை கைவிடுவோம். குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.பி, என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டம் கைவிடப்படும். அரசியல் ஆதாயத்திற்காக நடைபெறும் போராட்டம் இதுவல்ல என தெரிவித்தனர்.