![tn assembly election 2021 election campaign start admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q8WR5D2VUpdUlEb73etFV2HLUD69kK98cfBx5elnqPE/1609073700/sites/default/files/inline-images/cm3432_0.jpg)
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் பரப்புரை பணிகளைத் தொடங்கி வைக்கும் தொடக்க பொதுக்கூட்டம் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
![tn assembly election 2021 election campaign start admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/AozFitkPT44czI-4WWN5i0mLjkdieRDOe0Yq-GvcTU4/1609073709/sites/default/files/inline-images/cm576_0.jpg)
இதற்கு முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக இன்று அ.தி.மு.க. கட்சியின் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.