சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஆகஸ்ட் 5- ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம். கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினால் தமிழ்நாட்டிற்கு வரலாம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் கரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது.
காசிமேட்டில் மாற்று இடங்களில் மார்க்கெட் கடைகளை மாற்ற திட்டம் உள்ளது. காசிமேடு பகுதியில் ஒரே இடங்களில் மக்கள் நிறைய பேர் கூடுவதைத் தடுக்க கடைகளை மாற்றத் திட்டம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் தரப்படும்" எனத் தெரிவித்தார்.