Published on 09/04/2021 | Edited on 10/04/2021
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன. நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவோர் அனைவரும் கட்டாயம் இபாஸ் எடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது மற்ற மாவட்டங்களில் எதிரொலிக்குமா என்பது அடுத்து வரும் சில தினங்களில் தெரியவரும்.