Published on 22/11/2021 | Edited on 22/11/2021
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு பிரிவு உபச்சார விழாவில் கூட கலந்துகொள்ளாமல் சஞ்ஜிப் பானர்ஜி சென்னையிலிருந்து விடைபெற்றார். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்ட நிலையில், அவர் நேற்று முன்தினம் (20.11.2021) தமிழ்நாடு வந்தார். இந்நிலையில், அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.