Published on 14/06/2018 | Edited on 14/06/2018
சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் இரு தொகுதிகளிலும் தேர்தல் -2016 நவம்பர் மாதம் 19ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் ரத்துக்கு காரணமான அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளின் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களிடம் தேர்தல் செலவுக்கான பணத்தை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, வேட்பாளர்களிடம் பணம் வசூலிக்க சட்டத்தில் இடமில்லை என கூறி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக சட்டத்திருத்தம் செய்வது தொடர்பாக அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.