Published on 06/01/2019 | Edited on 06/01/2019
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் ஒற்றை கரடியால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
குன்னூரில் சோகத்தோரை, தேனலை கிராமத்தில் நேற்று அதிகாலை புகுந்த கரடி ஒன்று ஓசை எழுப்பியதை கண்ட கிராம மக்கள் உடனடியாக கரடி புகுந்தது குறித்து வனத் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
ஆனால் வனத்துறை வருவதற்குள் அந்த ஒற்றை கரடி தேயிலை தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்தது. இந்நிலையில் கரடி ஒன்று ஊருக்குள் வந்துள்ளது அப்பகுதியில் பெரும் பீதி ஏற்படுத்தியதால் வீட்டைவிட்டு வெளியே வரவே பொதுமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சுற்றித்திரியும் கரடியை பிடிக்க வனத்துறை முயற்சித்து வருகிறது. தேயிலை தோட்டத்தில் கரடி புகுந்ததால் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களும் பணிக்கு செல்லவில்லை.