Published on 08/05/2022 | Edited on 08/05/2022

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்துப் பெற்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு மகள் கதீஜா ரஹ்மான் மற்றும் மருமகன் ரியாஸ்தீன் சேக் முகமது ஆகியோருடன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினைச் சந்தித்த புதுமண தம்பதியர் பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றனர்.

இந்த சந்திப்பின் போது, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.