Skip to main content

'பட்டப் பகலில் படுகொலை; அசால்ட்டாக தப்பிய கணவன்'-சிவகாசியில் பரபரப்பு

Published on 13/02/2025 | Edited on 13/02/2025

 

Husband escapes assault' - stir in Sivakasi

சிவகாசியில் பட்டப் பகலில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை குமரன். கோவையில் உள்ள அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கோவையில் இருந்து சிவகாசி வந்திருந்த திருமலை குமரன் மனைவியுடன் வழக்கம்போல வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கத்தியால்  மனைவி ராஜலட்சுமியை குத்தி கொலை செய்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்த நிலையில் திருமலைகுமரன் அந்தப் பகுதியிலிருந்து தப்பி ஓடி விட்டார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த ராஜலட்சுமி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலை செய்துவிட்டு சிறிதும் குற்றச்சலனம் இல்லாமல் அசால்ட்டாக அங்கிருந்து அவர் திருமலை குமரன் செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் ஈடுபட்ட  திருமலை குமரனை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்