Published on 20/08/2018 | Edited on 20/08/2018
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/LB-APRehzL6QZbyLq7LfMbSXJskEMJCP6lhHO3CTKIo/1534760962/sites/default/files/inline-images/vijayakanth%20anjali1_0.jpg)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் இருந்து முதல் கட்ட சிகிச்சை முடிந்து இன்று (20.08.2018) அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது இல்லத்திற்கு சென்றார்.
மீண்டும் இரண்டாம் கட்ட சிகிச்சைக்கு சில மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா செல்ல இருக்கிறார்.