Skip to main content

தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை! 

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

 

 Heavy rains in Tamil Nadu


சென்னையிலும் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை, மற்றும் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பூந்தமல்லியில் 6.1 சென்டி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 5.1 சென்டி மீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூர் 4.7 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூரில் 3.6 சென்டிமீட்டர் மழையும் பொழிந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்