Published on 29/04/2022 | Edited on 29/04/2022
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 29,000 டன் நிலக்கரி வந்திருக்கும் நிலையில், மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து அலகுகள் இயங்கி வருகின்றன. ஐந்து பிரிவுகளுக்கும் நாள்தோறும் 25,000 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தட்டுப்பாடு காரணமாக நான்கு அலகுகளில் மின் உற்பத்திப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒடிஷா மாநிலத்தின் பார்தீப் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலமாக 29,000 டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டது.
அது, அனல் மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 1, 2, 3 ஆவது அலகுகளில் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.