Published on 01/09/2021 | Edited on 01/09/2021

தமிழகச் சட்டமன்ற கூட்டத் தொடர் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விழுப்புரத்தில் இயங்கிவரும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைக் கட்டமைப்பு வசதியைக் கருத்தில் கொண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு அதை இணைப்பதாக ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர்.
இதற்கு அதிமுக தரப்பில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாகத் திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தெற்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்டவர்கள் தலைமையில் அந்தந்த பகுதிகளில் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன.