Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

Teacher misbehaved with school students

திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், திருவாரூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களை விடைத்தாள் திருத்த உதவி செய்ய வேண்டும் என்று தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் இரு மாணவர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். 

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்ற புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்