புற்றுநோய் சிகிச்சை முறை குறித்து தொடர்பான ஆய்விற்காக ஜப்பானுக்கு செல்ல உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில் வெளியான தகவலில், 'புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்த ஆய்வுக்காக நாளை ஜப்பான் செல்ல இருக்கிறோம். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பதில் ஜப்பான் நாடு முன்னோடியாக உள்ளது. இதன் காரணமாக புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து அறிந்துகொள்ள ஜப்பான் கூட்டுறவு முகமை எங்களை அழைத்துள்ளது. இதற்காக அரசு முதன்மைச் செயலாளர், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நாளை அதிகாலை ஜப்பான் செல்கிறோம். ஐந்து நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தில் தேசிய, மாநில அளவிலான மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஜப்பான் நிதி உதவி அளித்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.