Skip to main content

நடமாடும் டாஸ்மாக்; நபர் கைது

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

Man arrested for roaming TASMAC

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பிடிபட்ட நபரின் உடலில் சுமார் 100க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் ஒட்டி வைக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நபர் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்த பொழுது அவர் விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த நாகமணி என்பது தெரியவந்தது. அவருடைய ஆடையை சோதனை செய்தபோது  போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்தது.

உடல் முழுவதும் பேக்கிங் டேப் மூலம் சுமார் 120 மது பாட்டில்களை ஒட்டவைத்து புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. கால் பகுதிகளிலும் மதுபாட்டில்களை பேக்கிங் டேப் மூலம் பேக் செய்து பின்னர் அதற்கு மேல் மறைக்கும்படி உடை அணிந்து யாருக்கும் தெரியாத வகையில் மதுபாட்டில்களை கடத்தி அதை முயன்றதும் தெரிந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்