Skip to main content

ஐடி ரெய்டில் சிக்கிய அந்தரங்க வீடியோக்கள்! ஊழியரின் தற்கொலையில் பரபரப்பு தகவல்கள்

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

 

i


தனியார் இறால் ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலகம் சென்னை அடையாறில் உள்ளது.  தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இதன் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  இந்த மூன்று அலுவலகங்களிலும் கடந்த 28ம் தேதி அன்று ஐடி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் மட்டுமல்லாது,  ஊழியர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில், அலுவலக உதவியாளர் செந்தில்குமார்  வீட்டில் இருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்குகள், மொபைல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

செந்தில்குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட அந்த ஆவணங்களை அடையார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று  3வது மாடிக்கு சென்று செந்தில்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐடி ரெய்டின்போது அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  செந்தில்குமாரின் தற்கொலைக்கான காரணத்தை கேட்டு உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தானர் இது குறித்த விசாரணை நடந்து வந்தபோதுதான், அந்த அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் ஐடி அதிகாரிகள்.

 

ஐடி அதிகாரிகள் அந்த அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் கூறியுள்ளனர்.  செந்தில்குமார்  வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில்,  அலுவலக கழிவறையில் பெண் ஊழியர்கள் சிலர் உடைமாற்றும் அந்தரங்க காட்சிகள் வீடியோ பதிவாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 

இதையடுத்து அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ரகசிய வீடியோக்கள் வெளியானதால்தான் குற்ற உணர்ச்சியில் அல்லது அவமானம் நேரும் என்றும் பயந்து செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

இந்த ரகசிய கேமரா, அந்தரங்க வீடியோக்களின் பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்