
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (13.04.2025) நண்பகல் 01.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகத்தில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 15 முதல 40 டிகிர் செல்சியஸ் வரையிலும், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும். தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 32 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், மலைப் பகுதிகளில் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த வரையில் கடலோர ஆந்திராபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல ழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்றும், நாளையும் (14-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (15-04-2025) முதல் 19ஆம் தேதி ( 19-04-2025) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுலை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்தவரையில் இன்று முதல் 17ஆம் தேதி (17-08-2025) வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். அதாவது தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசெளகரியம் ஏற்படலாம். மேலும் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை ம்றுநாள் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் அத்ன புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்யெஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரையில் இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.