Published on 30/06/2023 | Edited on 30/06/2023
![greater chennai police commissioner taken charge](http://image.nakkheeran.in/cdn/farfuture/IAZH2nvOQp-KMsqMnw_592GGt06pUrp1jx0NmBJST_Y/1688116388/sites/default/files/inline-images/gcp.jpg)
சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோட் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காவல்துறை தலைமையகத்தில் டிஜிபியாக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக சென்னையின் காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோட் நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தனது பொறுப்பை சந்தீப் ராய் ரத்தோட்டிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோட் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.