![DMK leadership issues notice on appointment of district in-charges](http://image.nakkheeran.in/cdn/farfuture/FV2fdKHQQ40KLKDMSx8Q0L2Iv0qSKzY5LdqqlLlQgoU/1739448772/sites/default/files/inline-images/a539_3.jpg)
மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக பொதுச் செயலாளர் என்ற வகையில் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'விழுப்புரம் வடக்கு திமுக பொறுப்பாளராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு பொறுப்பாளராக கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மத்திய திமுக பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக இருந்த முபாரக் விடுவிக்கப்பட்டு கே.எம்.ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் விடுவிக்கப்பட்டு அப்துல் வகாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜன் விடுவிக்கப்பட்டு ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுகவின் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பழனிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக க.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.