Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதிய தொல்லியல் கட்டுரைகள் நூல் அறிமுக விழா..!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
skol stu


தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல..! என தாங்கள் சேகரித்த தொல்லியல் ஆவணங்களை சார்ந்து, அதனைக் கொண்டு “தேடித்திரிவோம் வா” என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளனர் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அரசுப் பள்ளி மாணவர்கள்.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் ஊர்களின் பெயர்க் காரணங்கள், கிராமக்கோயில்கள் வரலாறு, வழிபாட்டு முறைகள், கிராமத்துப் பாடல்கள், புதிய வரலாற்றுத் தடயங்கள் பற்றி களஆய்வின் மூலம் சேகரித்த தகவல்களைத் திரட்டி கட்டுரைகளாக எழுதி உள்ளார்கள். இதில் 12 மாணவ, மாணவிகளின் 14  கட்டுரைகளையும், இம்மன்றப் பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு எழுதிய 1 கட்டுரையையும் தொகுத்து “தேடித்திரிவோம் வா” எனும் பெயரில் நூலாக உருவாக்கி உள்ளனர். இதை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தலைமை வகிக்க, மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர், தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் மாணவர்களின் படைப்புகளை அறிமுகம் செய்து வெளியிட்டார். நிகழ்ச்சியில் திருப்புல்லாணி, பள்ளபச்சேரி, பொக்கனாரேந்தல், பால்கரை, உத்தரவை, தாதனேந்தல், கீழப்புதுக்குடி, கோரைக்குட்டம், பஞ்சந்தாங்கி, முத்துவீரப்பன்வலசை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டது முத்தாய்ப்பாக இருந்தது.

சார்ந்த செய்திகள்