அதிமுக வேட்பாளர்களில் மிக மூத்த எம்.பி.யான தம்பித்துரையை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தொகுதியில் நன்றி தெரிவிக்கும் வகையில் பெரிய பயணத்தை நடத்தினார். இந்த நன்றி அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு கரூர் செந்தில்பாலாஜியும் உடன் சென்றார். கரூரின் பல்வேறு பகுதியில் சேந்தமங்களம், எலந்தப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்றது. அப்போது மக்களிடம் வாக்களித்து வெற்றிபெற செய்தமைக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
\
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தலை தமிழக முதல்வர் எடப்பாடியே பொறுப்பேற்று தேர்தல் பணி செய்தார் 8க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர். இருந்தும் அதிமுக தோல்வியை தழுவியது. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. பிரதமராக பொறுபேற்கும் மோடிக்கு வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை ஒடுக்கும் வகையிலே மோடி ஆட்சி நடத்தினார்.
அவரது இந்த மனநிலை மாற வேண்டும். அப்படி அவருடைய மனநிலை மாறவில்லை என்றால் தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பிக்களுடன் இணைந்து மக்களவையில் மோடிக்கு எதிராக போராடுவோம் என்றார்.