Published on 22/12/2020 | Edited on 22/12/2020
தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (22/12/2020) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சென்னை தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான மருத்துவ வசதிகள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், எச்ஐவி ரத்தம் ஏற்றியதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இளநிலை உதவியாளர் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டனர்.