Published on 11/08/2018 | Edited on 11/08/2018

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விருதுநகர் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று நேற்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். திருச்சி சிவாவின் கோரிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு
இந்நிலையில் இன்று குழு அமைக்கப்பட்டுள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.