Skip to main content

கடலூரில் மது, மணல் கடத்திய  3 பேர் குண்டர் தடுப்புக் காவலில் கைது! 

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
kasi

 

கடந்த 7.9.2018 அன்று கடலூர் மாவட்டம்  பனப்பாக்கம் இரயில்வே கேட் அருகில் புதுபேட்டை காவல்துறையினர் மணல் தடுப்பு சம்பந்தமாக வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவராசு மகன் முருகன்(35) என்பவர் டிப்பர் லாரியில் திருட்டு மணல் ஏற்றி வந்துள்ளார். அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது தென்பெண்னை ஆற்றிலிருந்து திருட்டு மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. 

 

அது சம்பந்தமாக  புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து,  கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.   இந்நிலையில் முருகன் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் மணல் கடத்திய வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக இருந்ததாலும், அவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆணையின் பேரில் முருகன் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டார்.

 

kkka

 

இதேபோல் 25.9.2018 அன்று காலை  திட்டக்குடி வட்டம் நரையூர் ஏரிக்கரை அருகே உள்ள தார் சாலையில் மதுகடத்தல் தடுப்பு சம்பந்தமாக விருத்தாச்சலம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மணமல்லி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மகேந்திரா காரை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 550 லிட்டர் எரிசாராயம் இருந்ததை கைப்பற்றினர். மேலும் எரிசாராயத்தை கடத்தி வந்த திண்டிவனம் களத்து மேட்டுத்தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் முரளி( 27),  வேப்பூர் வடபாதியை சேர்ந்த ராயப்பிள்ளை மகன் சரத்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

முரளி மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும்,  திண்டிவனம் மதுவிலக்கு பிரிவில் 2 வழக்கும்,  சரத்குமார் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 5 வழக்குகளும் உள்ளன.  தொடர்ந்து மது கடத்தலில் ஈடுபட்டு வரும் இவர்களின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும்  குண்டர் தடுப்புக் காவலில் வைக்க வைக்க சிறைப்படுத்தப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்