Published on 27/02/2019 | Edited on 27/02/2019
தாமரைக்கோலம் போட்டால் 1000 ரூபாய் தருவதாகக் கூறி தங்களை ஏமாற்றிவிட்டனர் என தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆளக்காரப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் பாஜகவின் சின்னமான தாமரையை கோலமாகப் போட்டு அதன் நடுவே அகல் விளக்கு ஏற்றிவைத்தால் 1000 ரூபாய் தருவதாக சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பி அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் வாசலில் தாமரைக்கோலம் போட்டு விளக்கேற்றி வைத்தனர். பணம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் தாங்கள் யாரும் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்துள்ளனர்.