வேலூர் மாவட்டம் சில மாதங்களுக்கு முன்பு வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை என மூன்றாக பிரிக்கப்பட்டது. இதற்கான மாவட்ட எல்லை வரையறை 90 சதவிதம் முடிந்துள்ளது. இந்நிலையில் சில கிராமங்கள் வேலூர் மாவட்டமா ? அல்லது திருப்பத்தூர் மாவட்டமா? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.
![26 villages changing the border ... !! Farmers in struggle ... !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6EvUcBV9lS46jBbS6-PndRdsbA3QPfUZpPug-m8J0-c/1581392008/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202020-02-10%20at%2011.30.20.jpeg)
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா எங்கள் கிராமத்துக்கு மிக அருகாமலையில் உள்ளது. பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள எங்களை மாதனூர் ஒன்றியத்தில் கொண்டும்போய் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி போராட்டம் நடததி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே பேரணாம்பட்டு ஒன்றியத்தில் துத்திப்பட்டு வருவாய் பிர்கா கிராமங்களான 26 கிராமங்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள மாதனுர் ஒன்றியத்தில் சேர்ப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்மென திருப்பத்தூர் மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிராக, அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வழக்கறிஞர்களை தொடர்ந்து விவசாயிகளும் இந்த 26 கிராமங்களுக்காக போராட்டத்தில் குதித்துள்ளனர்.