![drainage](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z6boGNhCE-kr8zr6VY46fhfs8t7REOkdORekHINsNnU/1548248956/sites/default/files/inline-images/drainage.jpg)
கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட்டில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டிதுரை மற்றும் முருகன். இருவரும் தனியாக துப்புரவு பணிகளை செய்து வந்தனர். சிங்காநல்லூர் திருநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடந்த 4 மாதமாக துப்புரவு பணிகளுக்காக இருவரையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் பாண்டிதுரை, முருகன், சுரேஷ் ஆகிய 3 பேர் துப்புரவு பணிகளுக்காக வந்துள்ளனர்.
அப்போது பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை எடுக்க, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணிகளை மேற்கொண்டுள்ளனர். சாக்கடையில் இறங்கி துப்புரவு பணிகளை மேற்கொண்ட பாண்டிதுரை மற்றும் முருகன் ஆகியோர் எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இருவரது உடல்களும் சாக்காடையில் சிக்கிய நிலையில், தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டனர். இதையடுத்து பாண்டிதுரை, முருகன் இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர்விசாயணை நடத்தி வருகின்றனர்.