Skip to main content

“இந்து மதத்தை உருவாக்கியது யார்?” - கர்நாடகா அமைச்சர் கேள்வி

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

"Who created Hinduism?" - Karnataka Minister Question

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் ‘அம்பாள் எந்த காலத்திலே பேசினாள்’ என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்; அடைவார்” என்றார்.

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உட்படப் பலர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வர ராவ் இது குறித்துப் பேசியுள்ளார்.

 

"Who created Hinduism?" - Karnataka Minister Question

 

நேற்று கர்நாடகா மாநிலம், கொரடகெரே கிராமத்தில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஜி. பரமேஸ்வர ராவ், “எனது கேள்வியே இந்து மதம் எப்போது பிறந்தது? அதனை யார் உருவாக்கினார்கள்? உலக வரலாற்றில்  நிறைய மதங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக, இங்கு (இந்தியாவில்) ஜைன மதம், புத்த மதம் தோன்றியுள்ளன. ஆனால், இந்து மதம் எப்போது உருவானது? அதை உருவாக்கியவர்கள் யார்? என்பது தற்போது வரை கேள்வியாக உள்ளது. நமது நாட்டில் புத்த மதம், ஜைன மதம் தோன்றிய வரலாறுகள் இருக்கின்றன. மேலும், இஸ்லாமும் கிறித்துவ மதமும் வெளிநாடுகளில் இருந்து வந்தவை. உலகில் உள்ள அனைத்து மதங்களின் சுருக்கமும் மனித குலத்திற்கு நல்லது” எனப் பேசியுள்ளார்.

 

அமைச்சர் உதயநிதி, “நான் மீண்டும் இது குறித்து பேசுவேன்.. நான் இந்து மதத்தை விமர்சிக்கவில்லை. சனாதனத்தைத் தான் எதிர்க்கிறேன்” என செவ்வாய்க் கிழமை பேசினார். அப்போது, உங்களால் சனாதனத்திற்கு நிகழ்கால உதாரணத்தை கூற முடியுமா எனக் கேட்க. அவர், “புதிய நாடாளுமன்றம் திறப்பிற்கு, மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களைக் கூட அழைக்கவில்லை. அதுவே சிறந்த நிகழ்கால உதாரணம்” எனப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்