பா.ஜ.க தேசிய தலைவர் எச். ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது வலியுறுத்தி கீரமங்கலத்தில் உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரித்து போராட்டம்.
பெரியார் சிலையை உடைக்கப்படும் என்று சமூகவலைதளைத்தில் பதிவிட்ட எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கீரமங்கலத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் எச்.ராஜா படம் மற்றும் உறுவ பொம்மையை செருப்பால் அடித்து தீ வைத்து எரித்தனர்.
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. அந்த நிலை அகற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து ஆதரவாகவும் இதே போல தமிழ்நாட்டில் பெரியார் சிலைக்கு நடக்கும் என்றும் பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜாவவின் சமூக வலைதளத்தில் பதிவு வெளியானது. இந்த கருத்து பதிவு வெளியானது முதல் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் ஆங்காங்கே எச்.ராஜா உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அந்த பதிவை நான் வெளியிடவில்லை என்ற எச்.ராஜா கூறியுள்ளார்.
எச்.ராஜாவின் பதில் ஏற்புடையதில்லை என்று பா.ஜ.க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை கருத்து கூறியுள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் தி.மு.க திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஞான.இளங்கோவன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன், முன்னால் எம்.எல்.ஏ ராஜசேகரன், தி.மு.க நகரச் செயலாளர் சிவக்குமார், திராவிடர் கழகம் மாரிமுத்து, ம.தி.மு.க தமிழ்குமரன், காங்கிரஸ் கட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் திரண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பேருந்து நிலையம் பகுதியில் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டவாறு பேரணியாக வந்த பழைய பேருந்து நிலையம் பகுதியில் எச்.ராஜா படங்கள், மற்றும் உருவ பொம்மையை செருப்பால் அடித்து தீ வைத்து எரித்தனர். உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டதால் அருகில் நின்ற போலிசார் தீயை அனைத்து உருவ பொம்மையை கைப்பறினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.