பொள்ளாச்சி விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.ஐ. சீக்ரெட்டா ஒரு அதிரடி ரிப்போர்ட்டைத் தயார் பண்ணி டெல்லிக்கு அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில், பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டிருப்பது உண்மைதான் என்றும், இவர்கள் ஏழ்மையான, அழகான பெண்களை குறிவைத்து செயல்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அந்த மாதிரியான அப்பாவிப் பெண்களைக் கவர மகளிர் சுய உதவிக் குழுவில் அவர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக அணுகுவார்கள். இந்தக் கிரிமினல் கும்பலில் சிலர் கந்துவட்டித் தொழிலையும் நடத்தி வந்தனர்.
அதனால் பெண்களுக்குக் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தும் அவர்களை வீழ்த்தினார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பெண்களை இவர்கள் தங்கள் வலையில் விழ வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அதோடு, இவர்களால் ஏமாற்றப்பட்ட நான்கைந்து பெண்களின் கண்ணீர் ததும்பும் வாக்குமூலத்தையும் அவர்கள் இணைத்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆளுந்தரப்பு பிரபலங்கள் பலர் பெயர் அடிபடுவதாக கூறுகின்றனர். இந்த பகீர் அறிக்கையைப் பார்த்த டெல்லி மேலிடம், உள்ளாட்சித் தேர்தல்வரை மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம். நாங்கள் சொல்லும்போது நட வடிக்கை எடுத்தால் போதுமானது என்று சொல்லியிருக்கிறது.