Skip to main content

கூட்டணி? திமுக தலைவர்தான் தெளிவுப்படுத்த வேண்டும் : வைகோ பேட்டி

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
vaiko m.k. stalin



திமுக பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், ''திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக இல்லையா? என்ற கேள்விக்கு, இப்போது இல்லை, இன்னும் கூட்டணி அமைக்கவில்லை. அவர்கள் நண்பர்கள், எங்க கருத்தோடு ஒத்த கருத்தாக இருக்கிறார்கள். யார் யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற ஸ்டேஜ்க்கு நாங்கள் இன்னும் வரவில்லை'' என்றார். 
 

இந்த நிலையில் புதுக்கோட்டையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்று துரைமுருகன் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.
 

அதற்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்கள் தோழர்கள் மிகவும் மனவருத்தத்தில் இருக்கிறார்கள். நாங்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள். ரொம்ப மனவருத்தத்தில் இருக்கிறோம். நான் தன்மானத்திற்காக வாழ்திட்டவன். தன்மானத்தைவிட இயக்கம் பெரிது. என் தன்மானத்தைவிட தமிழ்நாட்டின் நலன் பெரிது. என் தன்மானத்தைவிட ஈழத்தின் விடுதலை முக்கியமானது. அப்படியென்றால் திமுக பொருளாளர் துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே? திமுக தலைவர் கருத்து என்னவென்று அவர் சொல்லட்டும். அவ்வளவுதான். திமுக தலைவர்தான் இதனை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார் வைகோ. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்