Skip to main content

தீர்ப்பிற்கு பிறகு முதன்முறையாக தலைமை அலுவலகம் செல்லும் இ.பி.எஸ். - கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Edappadi Palaniswami at AIADMK head office

 

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி காலை கூடியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே சமயத்தில் ஓபிஎஸ் தரப்பினர், பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்த விவகாரத்தை அறிந்து தலைமை அலுவலகத்தின் வெளியே இபிஎஸ் தரப்பினரும் கூடினர். இதனால் அங்கு ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே மோதல்  வெடித்தது. அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை மயிலாப்பூர் வட்டாச்சியர் பூட்டி சீல் வைத்தார். அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் வழங்கியது.

 

சாவியை பெற்ற இபிஎஸ் தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் உட்பட சில அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் பின் தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் ஆவணங்களும் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நாளை எடப்பாடி பழனிச்சாமி தலைமை அலுவலகத்திற்குச் செல்லப்போவதாக அதிமுக தலைமை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது "அதிமுக கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 8.9.2022 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்