







Published on 19/03/2021 | Edited on 19/03/2021
தமிழக சட்டமன்றத் தேர்தல், வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்துவருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார். இவர், நேற்று (18.03.2021) ஆயிரம் விளக்கு தொகுதி மக்களைச் சந்தித்து வீடுவீடாக வாக்கு சேகரித்தார். இந்தத் தொகுதியை அதிமுக, அதன் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கியது. டாக்டர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.